உலக சவால்களை வெற்றிகொள்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக தயார்ப்படுத்தப்படவுள்ள இராணுவம்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Sri Lankan Army
PriyaRam
2 years ago
உலக சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இந்த வருட இறுதியில் உலகம் முழுவதும் உள்ள ஆயுத படையினர் முகம்கொடுக்கவிருக்கும் புதிய சவால்கள் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.