இலங்கையில் அமுலாகவுள்ள கடுமையான சட்டங்கள்: பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை

#SriLanka #government #Defense # Ministry of Defense
Mayoorikka
2 years ago
இலங்கையில்  அமுலாகவுள்ள கடுமையான சட்டங்கள்: பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் ஆறுமாதங்களுக்கு கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

 கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

 சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸ் திணைக்களமும் அடிபணியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 எதிர்வரும் 6 மாதங்களில் நாட்டில் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!