கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் கௌரவம்!

#SriLanka #Kilinochchi #government #Award
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் கௌரவம்!

முன்மாதிரியான பெண்தலைமைத்துவத்திற்கான விருது" கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைத்துள்ளது.

 Women Icon Times Women மற்றும் world Women Council உடன் இணைந்து வழங்கிய "முன்மாதிரியான பெண்தலைமைத்துவத்திற்கான விருதை" கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் றூபவதி பெற்றுள்ளார்.

 அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கிவரும் Women Icon அமைப்பானது, தங்களின் சொந்த வாழ்க்கையில் சாதித்த பெண்களின் திறமையை சிறப்பிக்கும் வகையில் விருதினை வழங்கி கொண்டாடுகின்றது. ஒருவரின் திறமை மற்றும் செயல்திறனுக்காக அவரை பாராட்டுவதனூடாக அடுத்த கட்டத்திற்கு முன்னேற அவர்களை ஊக்குவிக்கின்றது. 

images/content-image/2023/1702599092.jpg

 எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் நுழைவாயிலாக இருக்கும் சாதனையாளர்கள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும். மனவுறுதிக்கும், உழைப்புக்கும் முன்னுதாரணமான பெண்கள் கெளரவப்படுத்தப்படல் வேண்டும்.

 ஒரு பெண்ணின் சாதனைகளைப் புகழ்ந்து, அவர்கள் விரும்பும் துறையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாகவே விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!