கிளிநொச்சியில் அதிகரிக்கும் நோய்த் தாக்கம்! விவசாய பணிப்பாளர் விடுத்த உடனடி உத்தரவு
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கங்களை நேரில் சென்று ஆராய்வதற்கான கிளிநொச்சிமாவட்ட விவசாய பணிப்பாள் சூரியகுமார் ஜெகதீஸ்வரி உள்ளிட்டா குழுவினர் நேற்றைய தினம் 13.12.2023 வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு நகர் போன்ற பகுதிகளிற்கு சென்றிருந்தனர்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள நோய் தாக்கம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு நோய் தாக்கங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
தற்பொழுது அநேகமான பகுதிகளில் கிரிமினசினி விற்பனை நிலையங்களில் காலாவதியான கிருமி நாசினிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதனை அவதானிக்காத சில விவசாயிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த விடயமும் கண்டறியப்பட்டது.
எனவே இது தொடர்பாக விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் கிருமி நாசினிகளில் ஒட்டப்பட்டுள்ள காலாவதி திகதிகளை சரியாக உறுதி செய்த பின்னர் தங்களது பயன்பாட்டிற்கு கொள்வனவு செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நோய்த் தாக்கங்கள் ஏற்படும் பொழுது அருகில் உள்ள கமநலசேவை விவசாய போதனை ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் எனவும், தற்பொழுது நோய் தாக்கமானது கிளிநொச்சி மாவட்டத்தில் 8.000 ஹெக்டர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.