மயிலத்தமடு மாதவனையில் திடீர் சுற்றிவளைப்பு - களமிறக்கப்பட்டுள்ள பொலிஸ் குழு!
#SriLanka
#Batticaloa
#Police
PriyaRam
2 years ago
மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் 50 பேர் கொண்ட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய வெரும்பான்மையின மக்கள் சேனைபயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் சங்கத்தினர், கடந்த 90 நாட்களாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது