அனுர குமார திஸாநாயக்க மீது குற்றம்சாட்டும் தேரர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
Thamilini
2 years ago
தேசிய மக்கள் படைத் தலைவர் அனுர குமார திஸாநாயக்க விகாரையில் இருந்து வெளியே வந்த போது கையில் கட்டியிருந்த பிரித் சரத்தை தூக்கி எறிந்ததாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய வலஹங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அனுர குமார திஸாநாயக்க அவர்கள் கட்சியின் தலைவராக பதவியேற்ற நாட்களில் மிஹிந்தலை விகாரைக்கு வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
உறைவிடத்தை விட்டு வெளியே வந்தவுடன் அங்கிருந்தவர்கள் சரத்தை அவிழ்த்து எறிவதைக் கண்டு தனக்கு தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார். '
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.