நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
PriyaRam
2 years ago
நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2 ஆவது மின் பிறப்பாக்கிகள் டிசம்பர் மாதத்திற்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் திடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி செயலிழந்தது.

images/content-image/2023/12/1702528890.jpg

அத்துடன், 2 ஆவது மின் பிறப்பாக்கி தொடர்ந்து செயலிழந்து காணப்படுகிறது. இந்நிலையிலேயே, முதலாவது மற்றும் 2 ஆவது மின் பிறப்பாக்கிகள் இம்மாதத்திற்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், இந்நிலைமைகள் மின் உற்பத்தியில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!