இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஏற்படவுள்ள ஆபத்து - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #weather #Warning
PriyaRam
2 years ago
இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஏற்படவுள்ள ஆபத்து - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்படும் என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான அமர்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் தற்போதைய நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1702527450.jpg

இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் குறித்த நிகழ்வில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுண்ணூட்டச் சத்து இடைவெளி அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!