பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

VAT வரி அதிகரிப்பால் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அச்சங்கத்தின்  தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.  

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "ஜனவரி மாதத்தில் இருந்து சாதாரண பேருந்துக்கு  ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சம் செலவாகும். 18% வட் வரி அதிகரிப்பால் இது மேலும் 20 இலட்சத்தால் உயரும். 

அத்துடன்  உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, சர்வீஸ் சார்ஜ் எல்லாம் அதிகரித்து வருகிறது. மிகப் பாரதூரமான விஷயம் எரிபொருள் விலை உயர்வு. எரிபொருளுக்கு பதிலாக வட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அப்போது டீசல் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். அபாயம் மக்களுக்கானது. இவை அனைத்தும் அதிகரித்தால் மீண்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் போக்கு உள்ளது. இதுபற்றி ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!