சுவிஸர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களின் 40 ஆண்டுகால வரலாற்று நினைவு கூரல்
இலங்கை தமிழர்கள் சுவிட்ஸர்லாந்திற்கு புலம்பெயர்ந்த 40 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூரும் நிகழ்வு அண்மையில் பேர்ன் நகரில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
புலம்பெயர் தமிழர்களின் வருகையையும், அதன்போது அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகள் தீவிரமடைந்ததன் காரணமாக 40 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சுவிட்ஸர்லாந்திற்கு புலம்பெயர்ந்தனர்.
இன்று 60,000 உறுப்பினர்களைக் கொண்ட ஈழத் தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் குழுக்களில் ஒன்றாக மாறியுள்ளது. சுவிஸ் தமிழ் புலம்பெயர் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முழு நாள் நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் மக்களுக்கான ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.