இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
வளிமண்டல குழப்பம் காரணமாக இன்று (14.12) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் தற்காலிகமாக மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.