யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலிற்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Death #Police #Hospital #Crime
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலிற்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின் குடும்பத்தவர்கள் கோண்டாவில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் அவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

 இதன்போது மதுபோதையில் வந்த உயிரிழந்த நபரின் அக்காவின் மகன் (மருமகன்) அவரை தாக்கியுள்ளார். இந்த விடயம் அறிந்த அயலவர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

 மேலதிக சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்றையதினமே மாற்றப்பட்டார். இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்தார்.

 தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மந்திகை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!