மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு! சர்வதேச மாநாட்டில் சிறப்புரை

#SriLanka #Colombo #Meeting #Judge
Mayoorikka
2 years ago
மலையக  மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு! சர்வதேச மாநாட்டில்  சிறப்புரை

மலையகம் 200 என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் மாதம் 11, 12, 13 ஆம் திகதிகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் தொடர்பில் சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெற்றது.

 இனத்துவ கற்கைநெறிகளுக்கான நிறுவகமும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிறுவனமும் இணைந்து நடாத்திய குறித்த மூன்று நாள் மாநாட்டில் முக்கியமான கருப்பொருளாக சமத்துவத்தையும் உள் ளடக்கமான வளர்ச்சியையும் நோக்கிய நகர்தல் எனும் கருப்பொருளில் ஆய்வுகள் இடம்பெற்றன.

 முதல்நாள் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதியரசர் துரைராசா அவர்களுடைய சிறப்புரையும், விரிவுரையாளர்களது உரைகளும் இடம்பெற்றன. குறித்த மாநாட்டில் கல்வி, மொழி, அரசியல் சமூகம் எனும் நான்கு தலைப்புக்களிலும் குறிப்பாக வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் வாழ்கின்ற மலையக மக்களின் பிரச்சசினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

images/content-image/2023/1702475774.jpg

 அத்தோடு மலையக தமிழர்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, வாழ்வுரிமை, கல்வி கலை கலாச்சாரம், சுகாதாரம், காணி உள்ளிட்ட சமூக பொருளாதார அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கையின் சட்டவாளர்கள், கல்வியலாளர்கள், போன்ற பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

 இந்த மாநாட்டில் மலையக சமூகத்தில் இருந்து முதன்முதலாக உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற துரைராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வினை கலாநிதி ஜசோதரா அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

 குறித்த மாநாடு தொடர்பில் கலாநிதி ஜசோதரா கருத்து தெரிவிக்கையில், குறித்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஒரு கொள்கை ரீதியான ஆவணங்களை தயாரித்து வழங்குவதன் மூலம் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு முக்கியமான தீர்வை அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் தீர்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

 குறித்த மாநாட்டின் மூலம் மலையக தமிழர்களுக்கு ஒரு விடிவு ஏற்படும் என்பது தமது நம்பிக்கையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!