ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் IMF உடன் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் : சஜித்!

#SriLanka #Sajith Premadasa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் IMF உடன் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் : சஜித்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று (13.12) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான அடுத்த வரவு செலவுத் திட்டம்  ஹர்ஷடி சில்வாவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்,  சஜித் மேலும் தெரிவித்தார். 

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தனது கொள்கைகளை நாட்டுக்கு முன்வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த போது, ​​அடுத்த வரவு செலவுத் திட்டத்தை யார் முன்வைப்பது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், அடுத்த வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே முன்வைப்பார் எனக் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!