கிளிநொச்சியில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டும் முக்கிய செயற்திட்டம்!

#SriLanka #Kilinochchi #Coconut #Dollar
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டும்  முக்கிய செயற்திட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று 13/12/2023 காலை 09.00மணியளவில் இடம்பெற்றிருந்தது.

 குறித்த நிகழ்வில் பளை பிரதேச கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த நிகழ்வில் தென்னை பயிர் செய்கை அதிகளவில் மேற்கொள்ள எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக காட்சிபடுத்தப்பட்டு கள உத்தியோகத்தர்களிடம் அதற்கான தீர்வுகளும் கேட்டறியப்பட்டன. மேலும் அவர் கூறுகையில் வடமாகாணத்தில் இராணுவத்தினரிடமும், வனஜீவராசிகள் திணைக்களம், மற்றும் தரிசு நிலங்கள் உள்ளடங்களாக ஏறத்தாள 40 000 ஏக்கர் காணிகள் உள்ளன எனவும் குறித்த காணிகளை தென்னை பயிர்ச்செய்கைக்காக விடுவித்தால் 66.35மில்லியன் தேங்காய்கள் வழங்க முடியும் எனவும் 5828மில்லியன் ரூபாய் தேசிய வருமானமாக பெறலாம் எனவும் அதிக இலாபம் ஈட்டலாம் எனவும் தனது கருத்தனை வெளியிட்டிருந்தனர்.

 இத்திட்டத்தினூடாக பெறும் பயன்கள் பின்வருமாறு: மக்களின் வாழ்க்கை திறனை பெறல். 46.44 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருமானத்தினை பெறல். தென்னை சார்ந்த சுற்றுலாமையங்களினால் அமைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைத்தல்.

 வெளிநாட்டு முதலீட்டாளர்களை தென்னை சார்ந்த தொழிற்துறைகளை ஆரம்பிக்க ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!