தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளித்த உறுப்பினர்!
அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடாத்தி இவ்வாறு தெரிவித்தனர்.
இதன் போது கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவிவித்தனர். மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான செய்திகள் கல்முனை தமிழரசு கட்சி தொகுதி குறித்து வெளியாகி வருகின்றன.
எமது கிளைக்குள் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை என்பதோடு கட்சி கட்டமைப்பு அதன் வளரச்சி தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்திருந்தோம்.
ஆனால் தற்போது சூடு பிடித்துள்ள கட்சி தலைமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம் என குறிப்பிட்டனர்.