இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

#SriLanka #IMF #money #Finance
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இரண்டாம் தவணை கடன் பொதியாக சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாடியது.

 இதனையடுத்து இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டது.

 இதன்படி இலங்கைக்கு முதல் தவணை கடன் பொதி வழங்கப்பட்டிருந்ததுடன், முதல் தவணை விடுவிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 கடன் திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் திருப்திகரமாக இருந்தது. ஒரு செயல்திறன் அளவுகோலைத் தவிர மற்ற அனைத்தும் ஜூன் இறுதியில் அடையப்பட்டதாக கூறப்படுகின்றது.

images/content-image/2023/1702425551.png

 இலங்கை தொடர்பான செயற்குழு விவாதத்தைத் தொடர்ந்து, பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா அறிக்கை ஒன்றை வௌியிட்டிந்தார்.

 அதில், "மேக்ரோ பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்கள் பலனைத் தரத் தொடங்கியுள்ளதாகவும், பொருளாதாரம் உறுதிப்படுத்தப்படுவதற்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். கடன் திட்டத்தின் கீழ் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. 

ஜூன் இறுதிக்கான அனைத்து அளவு செயல்திறன் அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டன. வரி வருவாயைத் தவிர அனைத்து குறிப்பான இலக்குகளும் எட்டப்பட்டன. 

பெரும்பாலான கட்டமைப்பு அளவுகோல்கள் அக்டோபர் 2023 இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டன அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிலையில், இலங்கைக்கு இரண்டாம் தவணை கடன் பொதியாக சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!