பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட பிக்கு கைது!
#SriLanka
#Arrest
#Police
#Buddha
Mayoorikka
2 years ago
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்ற பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிக்கு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
சந்தேகநபரான பிக்கு நாளை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.