ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய நடவடிக்கை!

#SriLanka #Srilanka Cricket #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய நடவடிக்கை!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டுத் துறை  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அவர் தனது X வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்துமேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் அவதானிப்புகளுக்கான கணக்காய்வு அறிக்கை குறித்து எழுத்து மூலம் தங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!