கொழும்பில் தமிழர்களின் தகவல்களை சேகரிக்கும் திட்டம் குறித்து திரான் அலஸ் விளக்கம்!
#SriLanka
#Colombo
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டில் எந்தவொரு நபரையும் எந்தவொரு நேரத்திலும் அடையாளம் காணும் வகையில் புதிய கணினி அமைப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் தகவல்களை சேகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் திரான் அலஸ், இந்த தகவல்கள் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி அனைத்து சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்தும் சேகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த பணி தம்மால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல எனவும், யுத்த காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.