தமிழ்தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்!

#SriLanka #Sri Lanka President #R. Sampanthan #M. A. Sumanthiran #TNA
Mayoorikka
2 years ago
தமிழ்தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்!

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

 கொழும்பில் அமைந்துள்ள சம்பந்தரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்து கொண்டிருந்தனர்.

 இதன்போது நாட்டில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, புலம்பெயர் மக்களின் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவருவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட து.

 மேலும், இச் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பௌத்த மதகுருமார்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

 உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவரான ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!