கிளிநொச்சி வீதியில் ஆறு போல் பாயும் வெள்ளம்: பெரும் அவதியில் மக்கள்
#SriLanka
#Kilinochchi
#weather
#Rain
#Flood
#Disaster
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர் பாய்கின்றது.

இதன் காரணமாக வீதியால் பயணிக் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே பகுதியில் சிலரது வீடுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக அயலவர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.


