83 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து 83 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் சகோததர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று (11.12) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 05 பகுதியில் வசிக்கும் 54 மற்றும் 55 வயதுடையவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.