டீசலின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் தற்போது திருத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிக்கு (வட் வரிக்கு) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், டீசலுக்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி டீசல் லீற்றர் ஒன்றின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (11.12) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டீசல் லீற்றர் ஒன்றின் விலை 346 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இந்த அதிகரிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.