மாநாட்டை முடித்து பப்புவா நியூ கினியா சென்றடைந்த இந்திய பிரதமர்

#India #PrimeMinister #government #Visit #NarendraModi #Summit #Papua_New_Guinea
Prasu
1 year ago
மாநாட்டை முடித்து பப்புவா நியூ கினியா சென்றடைந்த இந்திய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி அமைதி சிலையை திறந்து வைத்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தினார். மேலும், ஜி7 மாநாட்டின் இடையே பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே உற்சாகமாக வரவேற்றார். 

பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பப்புவா நியூ கினியாவில் நாளை இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொகுத்து வழங்குகிறார்.

 பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!