சம்பள உயர்வு கோரி கனடாவில் பாரிய வேலை நிறுத்தம்

#Canada #Protest #people #government #Employees #Salary
Prasu
1 year ago
சம்பள உயர்வு கோரி கனடாவில் பாரிய வேலை நிறுத்தம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இன்றைய தினம் பாரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரச ஊழியர்கள் இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த போராட்டம் கியூபெக் மாகாண பொதுத்துறை ஊழியர்கள் ஒன்றியத்தினால் சுமார் 420,000 பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “சம்பள அதிகரிப்பு தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை நீடித்து வந்தது. மாகாண அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு வீதத்தை பொதுத்துறை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தன.

 16.7வீத அளவில் சம்பள அதிகரிப்பை ஐந்தாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும் என மாகாண அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் இந்த யோசனைக்கு பொதுத்துறை ஊழியர்கள் ஆதரவினை வழங்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!