பென்டகனின் ஏற்படவுள்ள மாற்றம் - ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#America
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்புத் துறை அல்லது பென்டகனை, அமெரிக்க போர்த் துறை என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவு இன்று (05) கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்புச் செயலாளரின் பதவியும் போர்ச் செயலாளராக மாற்றப்படும்.
இருப்பினும், பெயர் மாற்றத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படுவதால், தொடர்புடைய ஒப்புதல் கிடைக்கும் வரை ஜனாதிபதியால் துறையின் பெயர் மாற்றத்தை செயல்படுத்த முடியாது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



