ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு : 02 சிறுவர்கள் உயிரிழப்பு!
#SriLanka
#Russia
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரஷ்யாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது வகுப்பறையில் இருந்த மாணவர்களை இலக்கு வைத்து தொடர் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை மேற்கொண்ட மாணவி, பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாணவர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாணவி தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை பாடசாலைக்கு கொண்டு வந்ததை ரஷ்ய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.



