சீரற்ற வானிலை : இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு நாளை பிற்பகல் 1 மணி வரை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட நிர்மாண ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.



