பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
#SriLanka
#Police
PriyaRam
2 years ago
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என மிஹிந்தலை விகாராதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட வந்த போதே மிஹிந்லை ரஜமஹா விகாரையின் விகராதிபதி வலவாஹெங்குனவேவே தம்மரதன தேரர், பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நிரந்தர பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என கூறினார்.
நாட்டின் பொது பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதான பதவியில் பணியாற்றுவதற்கு மாத்திரம் ஒருவரை நியமிப்பது பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.