துபாயில் ஜனாதிபதி அறிவித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு!

#SriLanka #Sri Lanka President #weather #Ranil wickremesinghe #Dubai #University
Mayoorikka
2 years ago
துபாயில் ஜனாதிபதி அறிவித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு!

துபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழக (ICCU) திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

 உலக நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்கி செயற்பட்ட போதிலும், அந்த நாடுகள் ஒப்புக்கொண்ட இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நிறுவன மாற்றங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

 இலங்கையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 600 ஏக்கர் நிலப்பரப்பில் காலநிலை மாற்றத்திற்கான உத்தேச பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ளதுடன், இந்தப் பல்கலைக்கழகம் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல சர்வதேச பல்கலைக்கழகமாக செயற்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பங்களிப்பு. பங்களாதேஷ், சீஷெல்ஸ் மற்றும் மோல்டோவா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த பணிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் ஒரு தேசத்தின் பொறுப்பல்ல எனவும், முழு உலகமும் அதனுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!