துபாய் காலநிலை மாநாட்டில் அரச பிரதிநிதிகள் குழுவில் மஹேல: எழுந்த சர்ச்சை
துபாய்க்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை அரசபிரதிநிதிகள் குழுவில் தானும் இடம்பெற்றிருந்தார் என தெரிவிக்கப்படுவதை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நிராகரித்துள்ளார்.
சனிக்கிழமை துபாயில் இடம்பெற்ற நிகழ்வில் COP 28 Climate Justice Forum மஹேல ஜெயவர்த்தன காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பியவேளை இலங்கை பிரதிநிதிகள் குழுவில் ஒருவராக மஹேல ஜெயவர்த்தன கலந்துகொண்டார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தனியாக பணம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், தான் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் ஒரு பகுதியாக செல்லவில்லை என மஹேல தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டேன். ஆனால் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நான் இடம்பெற்றிருக்கவில்லை என மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகளின் தூதுவர் தான் எனவும் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பரப்புரை செய்கின்ற காலநிலை நீதி தொடர்பான விடயத்திற்கு நான் ஆதரவளிக்கின்றேன் என மஹேல தெரிவித்துள்ளார்.