2024 தேர்தலுக்கு முன்னதாக புதிய வேலை திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக பசில் அறிவிப்பு!
#SriLanka
#Basil Rajapaksa
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முன்வைக்கவுள்ளதாக கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பசில் ராஜபக்ஷவின் குறித்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.
அடுத்த 5 வருடங்களுக்கு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை கட்சி உருவாக்கியுள்ளதாகவும், எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் மேலும் பொருத்தமான முன்மொழிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.