முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #three-wheeler #Fuel
PriyaRam
2 years ago
முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டியின் பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வான்களின் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 346 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.

images/content-image/2023/11/1701421628.jpg

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 329 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 3 ரூபாவினால்; உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 434 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கனியவள கூட்டுத்தாபனத்தின் இந்த விலைத்திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையினை திருத்தம் செய்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!