போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது
#SriLanka
#Arrest
#Police
#Court Order
#sri lanka tamil news
#Foriegn
#Church
#Pastor
Prasu
2 years ago
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இவ்வாறு இன்று காலை ஆஜராகியிருந்தார்.
பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.