இதுவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 10 பேர் மட்டக்களப்பில் கைது! சாணக்கியன்
#SriLanka
#Sri Lanka President
#Batticaloa
#Arrest
#Ranil wickremesinghe
#sanakkiyan
Mayoorikka
2 years ago
அரசாங்கம் தனது நல்லிணக்க முயற்சிகள் குறித்து நேர்மையாகயில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் இதுவரை இந்த வாரம் மாத்திரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பத்து பேர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் மாணவர் ஒருவரும் அரசியல்வாதியொருவரும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேக் விற்றதாக வெதுப்பக ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டமை மிகவும் அபத்தமானது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.