நாய் இறைச்சி தடைக்கு எதிராக பண்ணையாளர்கள் போராட்டம்
#Protest
#SouthKorea
#Banned
#Fight
#Dog
#meat
#Farmers
Prasu
1 year ago

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் நாய்க்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற பரிசீலித்தது.
பின்னர் நாய் இறைச்சிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணையாளர்கள், நாய் இறைச்சி பிரியர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் இறங்கி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அந்த நாட்டில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.



