புதுக்குடியிருப்பில் போதைக்கு அடிமையான இளைஞர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
புதுக்குடியிருப்பில் போதைக்கு அடிமையான இளைஞர் கைது!

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவேலி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த இளைஞர் போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன்   இவரல் களவாடப்பட்ட 16 காஸ்சிலிண்டர்கள் ஒரு தண்ணீர் மோட்டார் ஒரு மிதிவண்டி வயர் ரோல்கள் கதிரைகள் தங்கசங்கிலி உள்ளிட்ட பெருமளவான பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

images/content-image/1701261419.jpg

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் வீடுகளுக்கு செல்லும் குறித்த இளைஞன் அங்கு காணப்படும் காஸ் சிலிண்டர்களை களவாடுவதுடன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.  இவற்றை விற்று போதைப் பொருட்களுக்கு பயன்படுத்தி வருவதாக விசாரணைகளில்  தெரிய வந்துள்ளது.

இவ்வாறான கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக் குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!