அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி அபகரிக்கப்படும் அபாயம்!

#SriLanka #Jaffna #pressmeet
PriyaRam
2 years ago
அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி அபகரிக்கப்படும் அபாயம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.

“அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி தொடர்பில் அண்மையில் பொது அமைப்புகளுடன் சங்கானை பிரதேச செயலாளர் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார்.

அதன் போது, குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.

images/content-image/2023/11/1701259745.jpg

கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரம் கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. 

கவே, வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் எதிர்க்கிறேன். இதேவேளை, குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

எனவே,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!