தடுப்பூசிகள் மோசடி தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒருவர் கைது

தடுப்பூசிகள் மோசடி தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதானி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதானி அழைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தடுப்பூசி மோசடிகள் தொடர்பில் இதுவரையில் 38 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரி அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு இந்த அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



