மாவீரர் நினைவேந்தலில் விடுதலைப்புலிகளின் ஆடையுடன் சிறுவர்கள் - பொலிஸார் சட்ட நடவடிக்கை!
#SriLanka
#Jaffna
#Police
#Investigation
PriyaRam
1 year ago

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் வீசாந்தவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போரில் உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் கோப்பாயில் உள்ள துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்காக இந்த மூன்று சிறுவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



