மகளுடன் பாலியல் உறவு - தகவல் வெளியானதால் தந்தை தற்கொலை
அம்பாறை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது 16 வயது மகளுடன் பலாத்காரமாக பாலியல் உறவில் ஈடுபட்ட தகவல் வெளியானதன் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்தவர் அம்பாறை – பன்னல்கம பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவராவார். இவரது மனைவி 6 மாதங்களுக்கு முன்னர் வீட்டுப்பணிப்பெண்ணாக வெளிநாட்டில் பணிபுரிய சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர் தனது மகளுடன் பலாத்காரமாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் இது குறித்து எவரிடமும் வெளியிடக்கூடாது என மகளை அச்சுறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தந்தையை விசாரிக்க இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட தந்தை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்சுட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.