வெளியாகவுள்ளது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
#SriLanka
#School
#exam
#Susil Premajayantha
#Ministry of Education
PriyaRam
2 years ago
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.