இலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கை - புதிய அமைச்சர்!

#SriLanka #Parliament #Srilanka Cricket #Harin Fernando
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கை - புதிய அமைச்சர்!

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைத் தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஹரின் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதனை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த பொறுப்பு மிகவும் முக்கியமான பொறுப்பு, ஏனென்றால் இந்த நேரத்தில் விளையாட்டு என்பது நாம் அனைவரும் விரும்பும் ஒன்றாகும். 

images/content-image/2023/11/1701148810.jpg

தே நேரத்தில், இந்த விதிகளை மாற்றும்போது பல நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எவருக்கும் எதிராகச் செல்ல வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. 

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க உட்பட அனைவரின் உதவியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை சுத்தப்படுத்த விரும்புகின்றேன்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஐசிசி தடையை விரைவில் மாற்றியமைப்பது மிகவும் அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!