வட்டுக்கோட்டை இளைஞர் மரணம்: ஐந்து பேர் சாட்சியங்கள் பதிவு
#SriLanka
#Jaffna
#Court Order
#Court
Mayoorikka
2 years ago
வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
சாட்சி பதிவுகளையடுத்து வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.