சவுதி அரேபியாவின் அமைச்சர் பைசல் மற்றும் ஜனாதிபதி ரணிலுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!
சவுதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எஃப். அலிபிரஹிம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (27.11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்துவது, குறிப்பாக ஆடைகள் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து இதன்போது பேசப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இப்பிராந்தியத்தில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கை தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் பைசல் எப். அலிபிரஹிம் இதன்புாது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,மேற்கு ஆசியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிராந்திய விவகாரங்கள் தொடர்பாகவும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.