மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் உறவுகள் கண்ணீர் மல்க நினைவேந்தல்
#SriLanka
#Mannar
#Tamil People
Mayoorikka
2 years ago
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக,கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது..

அந்த வகையில் மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளனர்.

பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதி நிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.



