ஜனவரி 7 - அறிவிக்கப்பட்டது தேர்தலுக்கான திகதி!

#Election #Parliament #Bangladesh
PriyaRam
2 years ago
ஜனவரி 7 - அறிவிக்கப்பட்டது தேர்தலுக்கான திகதி!

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறும் என பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வன்முறைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

images/content-image/2023/11/1700117492.jpg

பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியினரால் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் நியாயமான தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என பங்களாதேஷ் தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!