அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பதவி!
#SriLanka
#Ranil wickremesinghe
PriyaRam
2 years ago
நலன்புரி நன்மைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை, இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் அனைத்து பிரதேச செயலாளர்களும் பிரதி நலன்புரி ஆணையாளர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட மேலதிக மற்றும் பிரதி நலன்புரி ஆணையாளர்களுக்கான பணிகளை நலன்புரி நன்மைகள் சபை ஒதுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.