லுனுகம்வெஹர துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!

#SriLanka #Death #Police #Investigation #GunShoot
PriyaRam
2 years ago
லுனுகம்வெஹர துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!

லுனுகம்வெஹர வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

31 வயதான அசங்க சம்பத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வேட்டையில் ஈடுபட்டிருந்த குழுவொன்று வனவிலங்கு அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகளும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் செல்ல முயன்றதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

images/content-image/2023/11/1700110321.jpg

அப்போது வனவிலங்கு அதிகாரிகள் அந்த கும்பலை துரத்திச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டார்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகளால் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தார்.

இதேவேளை, மீன் பிடிக்கச் சென்றவரையே வனவிலங்கு அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!